Shri Arunachaleswarar Temple Thiruvannamalai


Arulmigu Unnamulai Amman and Arulmigu Arunachaleswarar Temple Thiruvannamalai
அருள்மிகு உண்ணாமுலை அம்மன் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை



Thiruvannamalai Arunachaleswarar Temple


இறைவர் : அருள்மிகு அருணாசலேசுவரர்  

இறைவி :அருள்மிகு உண்ணாமுலை அம்மன்

தல மரம் : மகிழம் மரம்

தீர்த்தம் : சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்


God : Arulmigu Kabaliswarar  

Godess :Arulmigu Karpagaambaal Amman

Tree : Makizha Maram

Theertham : Sivagangai Theertham,Bhrama Theertham

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் !!

Arulmigu Arunachaleswarar Temple Thiruvannamalai.







Arulmigu Arunachaleswarar Temple Thiruvannamalai




அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை


திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பஞ்ச பூததலங்களில் அக்னிரூபனாகவும் சுயம்புலிங்கமாகவும் (தானாகவே தோன்றியது) அருள்புரிகிறார்.சுயம்புலிங்க வடிவில் அருணாசலேஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் ஆசை அழிந்து நாம் யார், எதற்காக இங்கு வந்தோம். எங்கு செல்ல வேண்டும், வாழ்வின் இறுதிநிலை என்ன என்னும் உண்மைகளை உணரமுடியும். அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மபொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது என்பதே உண்மை. இது வெறும் கல் மலை அல்ல. பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே கொண்டது என்பதே உண்மைலை என்பது .

மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. அண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும்.சுந்தரர், ஞானசம்பந்தர், அப்பர், வாதவூரர் ஆகிய நால்வரும் இத்தலத்து இறைவனைத் தொழுதேத்திப் பாடியுள்ளனர்

திருவண்ணாமலை திருத்தலம், அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது. அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பர் பெரியோர். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாசலமாகக் காட்சியளிக்கிறது. இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது சிறப்பு.

இம்மலையானது 2688 அடி (800 மீட்டர்) உயரம் கொண்டது. கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோ மீட்டர். இந்த பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றுகிறார்கள். 3 டன் பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபத்தின் ஒளியானது சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது.

தீபத் திருவிழா

உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.



மூன்று இளையனார்!

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார். கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.





Thiruvannamalai Arulmigu Arunachaleswarar Temple


Thiruvannamalai Temple is a Hindu Temple dedicated to God Shiva Located in the place of Thiruvannamalai,Tamil Nadu.In Thiruvannamalai Temple God Siva name is Shree Annamalaiyaar / Arunachaleswarar And Amman Name is Shree Unnamulaiyaammai, God Annamalaiyar is Swaymbu Murthi in this Thiruvannamalai Tempe.Thiruvannamalai Arulmigu Arunachaleswarar Temple is one of the famous Shiva Temple in Tamil Nadu.Thiruvannamalai Arulmigu Arunachaleswarar Temple is one of the 274 Thevaram Padal Petra Sthalam of lord Shiva.

The Name of this holy places are various, The common and popular name is Thiruvannamalai. Other Names are Arunachala,Arunagiri,Sonachala, Sonadri, Sonagiri,Sivaloka,Sthaleswararm, Arunapuri, Thiruvarunai.

The Very thought of Thiruvannamalai will bring salvation. The Sthalapuranam says that one can attain salvation by being born in Thiruvarur, By meeting with death in kaasi, By worshipping at chidambaram and by more thinking of thiruvannamalai. So we find in Thiruvannamalai the easiest way to salvation.It is therefour very essential that we should know all about its greatness, being one of the four mukthi Kshetrams.

The thiruvannamalai temple is situated east at tha bottom of the Thiruvannamalai hill half a mile west of the Railway Station, It faces East, It has got four Stately towers on all the four sides and four high stone walls like the rampart walls of a fort. The eastern tower called RAJAKOPURAM is the highest. The southern kopuram is called Thirumanjana kopuram.The Thiruvannamalai Temple Occupies an extent of about 25 Acres of land and is one of the Biggest in south India.

The Separate temple for Unnamalai Nayaki Amman or Abithakujambal Amman Temple is Situated in North western portion of the third prakaram.In the Maha mandapam in front of the Arthamandapam of this shrine we see the images of Kalanthakar, Veenadhaar, Veerabadrar Adhilakshmi, Santhana lakshmi, Gajalakshmi, Dhana Lakshmi, Dhanya Lakshmi Vijayalakshmi,Ayswarya lakshmi,Meenakshi And Sarsswathi.Inside the Garbagraha we see the Charming and gracefull Godess Unnamulai Amman, the inseparable partner of Shri Arunachaleswarar. The Sanskrit name for the Godess is Abithakukambal Amman.

Events at Arunachaleswarar temple Thiruvannamalai

1. Chithirai - 10 Days Vasantha Urchavam , 10 Days Thiruvizha Begining from Miruga Seerisha Nakshatram
2. Chithirai - thirunavukarasar Thiruvizha Sathaya Nakshathiram
3.Vaikasi - Thirunana Samanthar Festival - Mula Nakshatram.
4. Aani - Dakshinaya Brahma Urchavam - 10 Days
5.Aadi - Aadi Pooram for Unnamulai Amman - 10 Days.
6.Puratasi - 9 Days Navarathiri Thiruvizha for Unnamulai Amman.
7.Aipasi - Kantha Sashti- 6 Days
8.Karthigai - Bramha Urchavam, Karthigai Deepam Thiruvizha - 10 Days
9.Markazhi - Manikavasakar Thiruvizha - 10 Days,
10.Thai - Sankaranthi Thiruvizha - 10 Days
11. Panguni - Uthiram Festival - 6 Days





Thiruvannamalai Arunachaleswarar Temple Opening Time

5.00AM To 12.30PM 4.00PM to 9.30PM


Arulmigu Arunachaleswarar Temple - Thiruvannamalai